சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் லாபத்தை அள்ளப்போகும் கமல்ஹாசன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தின் மூலம் கமலுக்கு லம்ப்பாக ஒரு தொகை லாபமாக கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது என்பதும் அந்த வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தை ராஜகுமார் பெரியசாமி என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கு முன்னரே இதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாயை லாபமாக எடுக்க உள்ளாராம் கமல்ஹாசன்.
இந்த படத்துக்காக சோனி பிக்சர்ஸ் நிறுவனம் 70 கோடியை கமல்ஹாசனிடம் வழங்க, அவர் சிவகார்த்திகேயனின் சம்பள உள்பட 50 கோடியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் கமலுக்கு 20 கோடி ரூபாய் லாபமாக டேபிள் ப்ராபிட்டாக கிடைக்குமாம்.