புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (08:09 IST)

கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? கமல்ஹாசன் டுவீட்

நீட் தேர்வு முடிவில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து தகவல்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் பரபரப்பை கொண்டிருக்கும் நிலையில் இந்த குழப்பங்கள் குறித்து சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் சிலர் காரசாரமாக பதிவு செய்து வருகின்றனர் 
 
குறிப்பாக சென்னையை சேர்ந்த அக்சய் என்ற மாணவர் தனக்கு 520 மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜீரோ மதிப்பெண்கள் தான் வந்ததாக கூறியது குறித்து அரசியல் தலைவர்கள் நீட் தேர்வின் குழப்பங்கள் குறித்து பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தற்போது இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
தேர்விலேயே ஆள் மாறாட்டம், 
முடிவுகளில் முழுக் குழப்பம்.
 
இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு. 
 
கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? 
 
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.