புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (00:06 IST)

தலைவன் இருக்கிறான்…படம் குறித்த புதிய தகவலை வெளியிட்ட கமல்ஹாசன் !

இந்திய சினிமாவில் அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு படத்திற்கும் புதுமைகளைப் புகுத்தி இன்றும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறார்.

இவரது அடுத்த படமான ’தலைவன் இருக்கிறான்’ குறித்த ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்ற நிலையில் இன்று கமல்ஹாசன் தனது டுவிட்டர்  பக்கத்தில் இப்படம் குறித்த ஒரு தகலை வெளியிட்டுள்ளார்.

அதில், மிஸ்டர்.ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நான் இணைந்து பணியாற்றவுள்ள தலைவர் இருக்கிறான் படம் குறித்த உரையாடல் வரும் ஜூன் 12 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்த்தவுள்ளோம்.

இதில், இப்படத்தின் இசை உள்ளிட்ட பல விசயங்களைப் பேச உள்ளதாக அவர் அதில் பதிவிட்டுள்ளார். @RKFI
@turmericmediaTM
@deepak30000
@Banijayasia
@OpenPannaa
#ThalaivanIrukkindraan