மீண்டும் ஒரே மேடையில் கமல்-ரஜினி: அரசியல் பேசுவார்களா?
சமீபத்தில் நடந்த சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருவருமே மறைமுகமாக அரசியல் பேசியதும் தெரிந்ததே
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ள '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் அடுத்த படமான 'இந்தியன் 2' படத்தை '2.0' பட நிறுவனமான லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதால் இந்த விழாவில் கமல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல், ரஜினி இருவருமே அரசியலுக்கு விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் இருவரும் ஒரே மேடையில் பேச இருப்பதால் இந்த கூட்டத்தில் அரசியல் குறித்து பேசுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்