புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (08:58 IST)

“ரசிகர்களின் அன்புக்கு பதில் இதை செய்யுங்க…” லோகேஷுக்கு கமல் அறிவுரை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவுட்ட உணர்ச்சிப் பூர்வமான டிவீட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதுவரை கமல் படத்துக்குக் கிடைக்காத வரவேற்பு இந்த படத்துக்கு கிடைத்தது. முதல்நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்படி ஒரு வரவேற்புக் கிடைத்த நிலையில் இயக்குனர் லோகேஷ் “ரசிகர்களின் இந்த அபரிமிதமான அன்புக்கு பதிலாக நான் எனன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை.” என டிவீட் செய்திருந்தார். இந்த டிவீட்டுக்கு பதிலளித்த கமல் “ரசிகர்களுக்கு அன்புக்கு பிரதிபலனாக நீங்கள் செய்யவேண்டியது திருப்தி அடையாமல் இருப்பதுதான். அவர்களுக்கு நேர்மையாக முதுகொடியும் அளவுக்கு வேலை செய்யுங்கள். அதைதான் அவர்கள் விரும்புவார்கள்” என அறிவுரை வழங்கியுள்ளார்.