திங்கள், 18 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2016 (14:47 IST)

கலாபவன் மணியின் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு

கலாபவன் மணியின் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கும்.
 

 
கலாபவன் மணியின் மரணம், அதிக மதுவால் ஏற்பட்டதில்லை, கடும் விஷமுள்ள ரசாயன பொருள்கள் உள்கொண்டதாலேயே மரணம் சம்பவித்தது என்பதை உடல் உள்ளுறுப்பு பரிசோதனையில் தெரிய வந்தது. கலாபவன் மணி தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டரா என்பதை கேரள மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 
அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்று கலாபவனின் மனைவியும், சகோதரரும் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர்.
 
இந்நிலையில், நேற்று மாலை கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா, மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில், கலாபவன் மணி மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாகவும், இது தொடர்பான ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.
 
இதன் மூலம் கலாபவன் மணியின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.