ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 டிசம்பர் 2018 (11:50 IST)

கேம் விளையாடுனதுனால கண்ணு போச்சு: நடிகை காஜல் புலம்பல்

தொடர்ச்சியாக கேம் விளையாடியதால பார்வை பாதிப்புக்கு ஆளானதாக பிக்பாஸ் நடிகை காஜல் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவர் தான் காஜல் பசுபதி. எதையும் போல்டாக பேசக்கூடிய குணம் கொண்டவர். இதுவே இவரது பிளஸ்ஸும் மைனைஸ்ஸும்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் காஜலிடம், வர வர டிவிட்டருக்கு வர மாட்டிங்கிறீங்க, ரொம்ப பிசியோ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர் கேம் விளையாடி கண் பார்வை காலியாகிடிச்சு. மொபைலை யூஸ் பண்ணக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார் என பதில் அளித்துள்ளார்.  அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறியும் இனி செல்போனை உபயோகிக்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.