புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (23:14 IST)

என் மெழுகுச் சிலையை முதன்முதலில் பார்த்தவர் இவர்தான் - காஜல் அகர்வால்

தனது மெழுகுச் சிலையைப் பார்த்த முதல் நபர் என் கணவர் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில்  முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்தாண்டு கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் முன்னணி நடிகர்கள்களின் படங்களில் ஹிரோயினாக நடித்து வருகிறார்  காஜல் அகர்வால்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மதம்  4 ஆம் தேதி சிங்கப்பூருக்கு விமானத்தில் போகும்போது, கவுதமுடன் இணைந்து சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருக்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்ட முதன் தென்னிந்திய நடிகை என்ற சிறப்பைப் பெற்றவர் காஜல் அகர்வால்.

இங்கு, உலக தலைவர்கள், மற்றும் சூப்பர் ஸ்டார்களுக்கும், பாலிவுட்டில் ஐஸ்வர்யாராய்,. அனுஷ்கா சர்மா, ஸ்ரீதேவி உள்ளிட்டோருக்கு சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் காஜலுக்கு அங்கு சிலை வைக்கப்பட்டுள்ளதற்கு பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இச்சிலையை கடந்தாண்டு அவர்தான் தொடங்கிவைத்தார்.  ஆனா இந்தச் சிலையை திறந்து வைப்பதற்கு முன்னமே அவருக்குக் காதலனாக இருந்த கௌதம் காஜலுடன் இணைந்து சிலைக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. இந்தச் செய்தியை காஜல் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.