வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (10:13 IST)

அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற மற்றொரு நடிகை!

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டின் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் விதமாக இந்திய நடிகர் நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதையடுத்து இப்போது இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் தங்கிக் கொள்ள கோல்டன் விசாவை அளித்து வருகிறது.

அந்த வகையில் இப்போது தென்னிந்திய சினிமா நடிகர்களுக்கு இந்த கோல்டன் விசாவை அளித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது காஜல் அகர்வாலும் இணைந்துள்ளார்.