செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 28 ஜனவரி 2017 (16:45 IST)

காற்று வெளியிடை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடித்துள்ள காற்று வெளியிடை திரைப்படம் ஏப்ரல் 7 வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
காதலையும், தேசிய அளவிலான அரசியலையும் பேசும் காற்று வெளியிடை படத்துக்கு ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து  பாடல்கள் எழுதியுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் முதல் டீஸரை வெளியிட்டனர். பிப்ரவரி 2 ஒரு பாடலை  வெளியிடுகின்றனர்.
 
ஏப்ரல் 7 -ஆம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் காற்று  வெளியிடையின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளது முக்கியமானது.
 
கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் டெல்லி கணேஷ், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட  பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, ஐதராபாத், லடாக், காஷ்மீரிலுள்ள பனி படர்ந்த பகுதிகளில் போன்ற  இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.