திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (22:10 IST)

விசு மீது பாக்யராஜ் போலீஸ் புகார்: அதிர்ச்சி தகவல்

இயக்குனர் விசு மற்றும் கே.பாக்யராஜ் ஆகிய இருவரும் சமகால இயக்குனர்கள். இருவருமே ஜனரஞ்சகமான குடும்ப படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்கள். இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விசுவுக்கு பதிலாக தற்போது கே.பாக்யராஜ் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் விசு மீது கே.பாக்யராஜ் திடீரென சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கே.பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், சமீபமாக நாங்கள் அனைவரும் பொறுப்புக்கு வந்திருக்கிறோம். இதற்கு முன்பாக நலிந்த எழுத்தாளர்களுக்கு கல்வி தொகை, மருத்துவ உதவி உள்ளிட்டவை என்று சொல்லப்பட்டது. நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன், அந்த அறக்கட்டளை நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ள அனைவரையுமே அழைத்தோம்.
 
விசு அவர்கள் எனக்கு வயதாகிவிட்டதால், பிறைசூடனைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர் தான் அனைத்துப் பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் என்றார். மற்றவர்களும் பிறைசூடன் தான் பொறுப்பு என்றார்கள். ”வாருங்கள். இது குறித்து சங்கத்தில் பேச வேண்டும். பணமில்லை அனைத்துமே அறக்கட்டளையில் இருக்கிறது” என்று பிறைசூடனிடம் சொன்னோம்.  அவர் சங்கம் வேறு, அறக்கட்டளை வேறு. இதற்கும் அதற்கு சம்பந்தமில்லை என்றார். சங்கத்திலிருந்து தானே பணமெடுத்து அறக்கட்டளை தொடங்கினீர்கள். பிறகு எப்படி சம்பந்தமில்லை என்று சொல்லமுடியும் என்று கேட்டோம்.
 
அதற்கு எழுத்தாளர் பிறைசூடன், ‘நாங்கள் கல்வி உதவித்தொகைக்கு எல்லாம் உதவி செய்ய மாட்டோம். நலிந்தோர்களுக்கு மட்டுமே செய்வோம். நாங்கள் ஒரு சில விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதில் நீங்கள் தலையிட முடியாது’ என்றார். மேலும், உங்களிடம் எனக்கு சம்பந்தமில்லை என்று சொல்லியிருக்கலாம். ஆனால், என்னிடம் தினமும் பேசிக் கொண்டுத்தான் இருக்கிறார். இதற்கு அவர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார் என்று பிறைசூடன் சொல்கிறார். சங்கத்தின் அனைத்துக் கோப்புகளையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அதையும் நாங்கள் பார்க்க முடியவில்லை.
 
இதற்கு வேறுவழியில்லாத காரணத்தால், அந்த அறக்கட்டளையில் இருந்த செயலாளர் பிறைசூடன், தலைவர் விசு உள்ளிட்டோர் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம். சங்கத்துக்காக அப்பணம் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் புகார் அளித்திருக்கிறோம். விசாரணை செய்து தொடர்பு கொள்கிறே என்று தெரிவித்திருக்கிறார்கள்
 
இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.