செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:08 IST)

மெரினா பீச்சில் ஜோதிகாவுக்கு மணல் சிற்பம்… அமேசான் ப்ரைம் செய்த நூதன விளம்பரம்!

நடிகை ஜோதிகா நடித்துள்ள 50 ஆவது படமான உடன் பிறப்பே நேற்று அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியானது.

அக்டோபர் 14-ஆம் தேதி ’அரண்மனை 3’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படம் ஜோதிகாவின் 50 ஆவது படம் என்பது தனிச்சிறப்பு.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனாக ஜோதிகாவின் 50 ஆவது படம் என்ற சிறப்புக்காக மெரினாவில் ஜோதிகாவுக்கு மணல் சிற்பம் வைத்து பார்வையாளர்கள் பார்வைக்காக வைத்துள்ளனர். இந்த மணல் சிற்பம் அக்டோபர் 17 ஆம் தேதி வரை வைக்கப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.