1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (18:49 IST)

இசையமைப்பாளர் ஜஸ்டினுக்கு அடித்த ஜாக்பாட்: கோலிவுட் ஆச்சரியம்

இசையமைப்பாளர் ஜஸ்டினுக்கு அடித்த ஜாக்பாட்
விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜஸ்டின் பிரபாகரன் அதன்பிறகு ஒரு சில சின்ன பட்ஜெட் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்தார்
 
ரஜினி கமல் அஜீத் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க விரைவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஜாக்பாட் அடித்தது போல் பிரபாஸ் நடித்து கொண்டிருக்கும் படமான ’ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் 
 
தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு அவர் மூன்று மொழிகளிலும் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மிகப்பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் இசையமைக்க ஜஸ்டின் பிரபாகர் வாய்ப்பு கிடைத்த ஜாக் பாட்டை பார்த்து கோலிவுட் திரையுலகமே ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்