திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (10:03 IST)

13 ஆண்டுகளில் இப்போதுதான் அது நடந்துள்ளது… துணிவு நடிகர் மகிழ்ச்சி!

அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் நடிகர் ஜான் கொக்கன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து நேற்று அஜித் டப்பிங் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஜான் கொக்கன் வீரம், பாகுபலி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்.

துணிவு படத்தில் நடிப்பது குறித்து “நான் முதல் முறையாக பாசிட்டிவ் ரோலில் நடிக்கிறேன். படத்தின் செகண்ட் ஹீரோ போன்ற ரோல்’ என சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது துணிவு படத்துக்காக தான் டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டு “13 ஆண்டு சினிமா பயணத்தில் முதல் முறையா ஒரு தென்னிந்திய படத்துக்கு நானே டப்பிங் பேசுகிறேன்” எனக் கூறியுள்ளார்.