பொங்கல் தினத்தில் வெளியாகிறது பூமி, ஆனால்...
ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் லட்சுமணன் இயக்கிய பூமி திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் பஞ்சாயத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது திரை அரங்குகள் திறந்து விட்ட நிலையில் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின் படி பூமி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வரும் பொங்கல் தினத்தில் ஜனவரி 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. திரையரங்குகள் திறந்து விட்ட போதிலும் ஓடிடியில் ரிலீஸ் செய்வது ஏன் என்ற கேள்வி திரையுலகினர் இடையே எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஜெயம் ரவியின் 25வது படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரோஹித் ராய், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் டட்லி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.