புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:34 IST)

என்னை யாரும் அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ் - வருந்திய ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூர் உருக்கமான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். 
 
இருந்தும் அவரது நடிப்பு பேசப்படவில்லை. இதனால் பெரிய நட்சத்திர குடும்பத்தில் இருந்தும் மார்க்கெட் இல்லாமல் போனார். இந்நிலையில் இது குறித்து வருத்தமாக பேசியுள்ள அவர், உனக்கு தான் நடிப்பு வரவில்லையே, அப்புறம் ஏன் இன்னும் இந்த பீல்டுல இருக்கீங்க ? என்று பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். இது போன்ற கேள்விகள் மிகவும் வேதனை அளிக்கிறது" அதனால் தயவுசெய்து இப்படி கேட்டு மனவேதனை படுத்தாதீர் என்று ஜான்வி கூறியுள்ளார்.