புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:48 IST)

மீண்டும் ஆஸ்கர் பரிந்துரையில் சூர்யா படம்! – சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி!

சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றது.

அதை தொடர்ந்து பல்வேறு விருதுகளிலும் பரிந்துரைக்கப்பட்டு வரும் ஜெய்பீம் ஆஸ்கர் விருது குழுவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் இடம்பெற்றது பெரும் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற படங்கள் பட்டியலில் ஜெய்பீம் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 276 படங்களில் ஜெய்பீம் இடம்பெற்றுள்ளது சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.