1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (15:29 IST)

விஜய் டிவியை விட்டு வெளியேறிய தொகுப்பாளினி: காரணம் என்ன??

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஜாக்குலின் சேனலை விட்டு விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சீரியல் மூலம் அறிமுகமானார் ஜாக்குலின்.
 
அதன் பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளியானார். தற்போது நிகழ்ச்சியை விட்டும் சேனலை விட்டும் ஜாக்குலின் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ஜான விஜய் பங்கேற்றார். அப்போது அவர் ஜாக்குலினுடன் நடனமாடியபோது அவரை தொட்டு நடனமாடினார். ஜாக்குலின் மேடையியேலே என்னை தொடாமல் ஆடும் படி கேட்டுக்கொண்டார்.
 
இதன் பின்னர் ஜெகன் நிகழ்ச்சியின் போது ஜாக்குலினை இரட்டை அர்த்ததில் கலாய்த்தார். நிகழ்ச்சியில் பலரும் ஜாக்குலினை கலாப்பதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுக்கிறது.
 
ஆனால், சிலரோ ஜாக்குலின் தற்போது சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். சமீபத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக ஒரு படத்தில் ஜாக்குலின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால்தான் சேனலை விட்டு விலகியிருப்பார் என கூறுகின்றனர்.