வலிமை படத்தில் யுவனுக்கு பதில் இமானா ? – ரசிகர்கள் அதிர்ச்சி !
அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமைப் படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவுக்குப் பதிலாக டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித்- ஹெச் வினோத் கூட்டணி இப்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் பணிபுரிந்த கலைஞர்களான நீரவ் ஷா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரே இந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கிய முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் படம் பற்றிய செய்தி ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அறிவித்தது.
படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பதில் டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை யுவனின் தரப்பு இதை மறுத்துள்ளது.