டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியத்திற்கு கட்டணமா? அதிகாரி தகவல்
உலகில் உள்ள சமூக வலைதளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது டெலிகிராம்.
இதிலுள்ள பல ஜிபிக்கள் கொண்ட வீடியோ மற்றும் பைல்களை, புத்தகங்களை சுலமகாக அனுப்பும் வசதி மற்ற ஆப்களில் இல்லாததால், இதந்தேவை மக்களிடம் அதிகரித்தது.
கடந்தாண்டு பிரைவரி சம்மந்தமாக வாட்ஸ் ஆப் சர்ச்சையில் சிக்கியபோது, டெலிகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த நிலையில், டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பாவேல் துரோவ் கூறியுள்ளார்.
இந்த பிரீமியம் போன்ற வசதிக்கு கட்ட்ணம் வசூலிக்கப்படவுள்ளது. ஆனால், டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவோர்க்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.