1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (09:05 IST)

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் தனது கடைசி படமாக அறிவித்த 69வது படத்தை கைவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ள விஜய்க்கு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நடிகர் விஜய் சமீபத்தில் ‘தமிழக வெற்றிக் கூட்டணி’ என்ற கட்சியை தொடங்கினார்.

அதனை தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நடிகர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் கமிட் ஆன படங்களை வேகமாக முடிக்கும் பணிகளில் உள்ளார். தற்போது தனது 68வது படமான GOAT படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவர் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தை நடிக்க உள்ளதாகவும், அதுவே அவரது கடைசி படம் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்தால் முடிவதற்கு ஒரு வருடம் ஆகிவிடும். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் நடிகர் விஜய் இப்போதே களப்பணியில் இறங்கினால்தான் தேர்தலில் கட்சி கணிசமான முன்னேற்றத்தை பெற முடியும் என கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஜய் தனது 69வது படத்தை கைவிடுவது குறித்த யோசனையில் உள்ளதாகவு, கோட் படமே அவரது கடைசி படமாக இருக்கும் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.