செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (08:50 IST)

இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு செல்கிறதா RRR?... வெளியான தகவல்!

கடந்த மார்ச் மாதம் வெளியான RRR திரைப்படம் சுமார் 1000 கோடி ருபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

பாகுபலி திரைப்படங்களின் வெற்றிகளுக்குப் பின் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவான படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி  வெளியானது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி ரூபாய், திரையரங்குகள் மூலமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு RRR படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் நெட்பிளிக்ஸில் மே 20 ஆம் தேதி வெளியானது. மற்ற தென்னக மொழி வெர்ஷன் ஜி 5 தளத்தில் அதே நாளில் ரிலீஸாகின.

இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுகளில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த தகவல் பரவி, சினிமா ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை எழுப்பியுள்ளது.