வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (17:38 IST)

மஹத் -ஐஸ்வர்யா இணைவது இந்த கதையா?

சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் மஹத் நடித்து வருகிறார். இந்தப் படத்தை  தொடர்ந்து நடிகர் மஹத் ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேரவுள்ளார். ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் மஹத் வட சென்னை இளைஞராகவும், அவர் காதலிக்கும் பெண்ணாக நடிகை ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்குகிறார். 
 
இது குறித்து அவர் கூறுகையில், இந்தப் படத்துக்கு முதலில் நடிகர் ஜி.வி.பிரகாஷை தேர்வு செய்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இந்த கேரக்டர்களில் மஹத்- ஐஸ்வர்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.