வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (23:56 IST)

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு இவர் மீதுதான் ’’ கிரஸ் ’’!

’’மைனே பியார் கியா’’ என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமனவர் பாக்யஸ்ரீ. இவர் அறிமுகமான படத்திலேயே உலகமெங்கும் ரசிகர்கள் இவருக்கு உருவாகினர்.

இப்படமும் அதிரடி ஹிட் ஆனது. இப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் சல்மான்கான்.

இந்நிலையில் பாக்யஸ்ரீ பிரபாஸின் அம்மாவாக ராதே ஸ்யாம் என்ற படத்தில்  நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தி நடித்தது குறித்த தனது அனுபவத்தை கூறிய பாக்யஸ்ரீ, இப்படத்தின் ஹீரோ, இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் தன்னை சிறப்புடன் கவனித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரபாஸ் இப்படப்பிடிப்பின்போது பாக்யஸ்ரீயிட, உங்கள் மீது ஒரு கிரஸ் உண்டு எனக் கூறியுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.