வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 24 ஜனவரி 2019 (07:23 IST)

ஹன்சிகாவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா?

நடிகை ஹன்சிகா நடித்து வரும் 'மஹா' படத்தின் செய்திகள் சமூக வலைத்தளங்களில் கடந்த பொங்கல் தினம் முதல் தினமும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஹன்சிகா செய்தித்தாள் படிப்பது போன்றும், அந்த செய்தித்தாள் இரண்டாக கிழிந்து தீயில் எரிவது போல் இருக்கும் 'மஹா' படத்தின் போஸ்டர் அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 'மஹா' படப்பிடிப்பு நடைபெற்றபோது ஆக்சன் காட்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் முதலுதவி மட்டும் செய்து கொண்டு வலியை பொருட்படுத்தாமல் ஹன்சிகா நேற்றைய படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு அதன் பின் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் ஹன்சிகாவின் டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து ஹன்சிகா விளக்கம் அளித்தபோது, 'எனது போன் மற்றும் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எனது குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே அதுவரை வெளிவரும் செய்தியை பொருட்படுத்த வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.