திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (11:16 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேற்றமா? கணவரின் பதிவால் எழுந்த குழப்பம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் அனிதா வெளியேறப் போவதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா பலராலும் வெறுக்கப்படும் ஒரு போட்டியாளராக உள்ளார். தனது விடாத பேச்சால் போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் அவர் கடுப்பேற்றி வருகிறார். ஆனால் வெற்றிகரமாக அவர் 60 நாட்களை பிக்பாஸில் வீட்டில் கடந்து விட்டார். இந்நிலையில் அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம் அவர் கணவர் வைத்த ஸ்டேட்டஸ் ஒன்றுதான். தனது சமூகவலைதளப் பக்கத்தில் மனைவியை பிரிந்து இருப்பது குறித்து இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது உன்னைப் பார்க்க என்பது போல ஒரு ஸ்டேட்டஸை வைத்திருந்தார். அதைப் பார்த்தே பலரும் அந்த முடிவுக்கு வந்த நிலையில் இப்போது அதை மறுத்துள்ளார் அவர். அதில் அனிதாவை பிரிந்து இருப்பதைக் குறித்தே அப்படி வைத்ததாகவும், எலிமினேஷன் பற்றி குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும் அனிதா வெளியேறுவாரா இல்லையா என்பது நாளை தெரிந்துவிடும்.