செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (11:53 IST)

முரட்டு குத்துக்கு மூன்றே நாளில் கிடைத்த ஒரு கோடி ரூபாய்

கவுதம் கார்த்திக், யாஷிகா, வைபவி நடிப்பில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. அஜித், விஜய் படங்களுக்கு இணையாக காலையில் சிறப்பு காட்சியுடன் தொடங்கிய இந்த படத்தின் வசூல் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.
 
இந்த படம் சென்னையில் மட்டும் 19 திரையரங்குகளில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களில் ஒரு கோடியே 8 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. சென்னையில் கவுதம் கார்த்திக் படங்களில் சிறந்த ஓப்பனிங் வசூல் கிடைத்த படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்திற்கு ஊடகங்கள் சுமாரான விமர்சனங்களையே கொடுத்திருந்தாலும் இளைஞர்கள் பட்டாளம் கொடுத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தின் வசூல் எகிறியுள்ளதாக விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் தயாரிப்பாளர் உள்பட அனைத்து தரப்பினர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.