வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (08:50 IST)

இந்தியன் 2 – ALL.. SET.. READY… GO…

கமல் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்புகள் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சிறப்பான வசூலையும் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதையடுத்து ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தினைத் தொடங்க ஆயத்தமாகியுள்ளார்.

கமலுக்கான வயதான இந்தியன் தாத்தாவுக்கான மேக்கப் டெஸ்ட்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக வெளிநாடுகளில் இருந்து மேக்கப் கலைஞர்கள் இந்தியா வந்து தங்கியுள்ளனர். இந்தியன் 2 படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கலை இயக்குனர் முத்துராஜ் தலைமையில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இந்தமாதம் 14 ஆம் தேதி முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது. அதையடுத்து சில தினங்களில் பொள்ளாச்சியிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்தியன் படம் கடந்த 1995 ஆண்டு வெளியாகி வசூல்சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.