மேடம் நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க...இந்துஜாவை வாழ்த்தும் ரசிகர்கள்!

papiksha| Last Updated: வெள்ளி, 8 நவம்பர் 2019 (12:48 IST)
ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பெரும் புகழை சம்பாதித்தார். இப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்திருந்தார்.  

இந்நிலையில் பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி விஜய் , ஏ.ஆர் ரஹ்மானுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.


இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், சூப்பர் சூப்பர் இன்னும் நிறைய நல்ல நல்ல படங்களில் நடிக்க  வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :