திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 மே 2016 (13:19 IST)

தெலுங்கில் ரீமேக்காகும் முண்டாசுப்பட்டி

தெலுங்கில் ரீமேக்காகும் முண்டாசுப்பட்டி

2014 -இல் தமிழில் வெளியான படம், முண்டாசுப்பட்டி. சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த இப்படத்தை ராம் இயக்கியிருந்தார்.


 


விஷ்ணு., நந்திதா காளி வெங்கட், ராமதாஸ் நடித்திருந்தனர். 
 
தமிழில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தற்போது முண்டாசுப்பட்டி தெலுங்கில் ரீமேக்காவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த ரீமேக்கில் விஷ்ணு நடித்த நாயக கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுதீர் பாபு நடிக்க உள்ளார். ஜுலையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
தற்போது சுதீர் பாபுடன் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.