1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (18:28 IST)

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் நயன்தாரா

நயன்தாரா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஆகியவை அடுத்தடுத்து ரிலீஸாகி, ரசிகர்களை ஆனந்த  அதிர்ச்சியில் ஆழ்த்த உள்ளன.

 
‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. ரொமாண்டிக் த்ரில்லரான இந்தப் படத்தில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 7 மணிக்கும், டீஸர் நாளை மறுநாள் மாலை 7 மணிக்கும் ரிலீஸ் ஆகும் என  படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்தடுத்து இரண்டும் ரிலீஸாவதால், நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம், நயன்தாரா நடித்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் ‘அறம்’ படத்தை வாங்க ஆளில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.