1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 30 மே 2018 (20:27 IST)

ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படத்தின் முக்கிய அப்டேட்...

ஜெயம் ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பற்றிய முக்கியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
 
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த நடிகர் ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்துள்ளார். ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், ஜெயம் ரவியின் மகனான ஆரவ் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்துக்குப் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியாக, ஜூன் 22ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை ‘ஸ்கிரீன் ஸீன்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதுதான் லேட்டஸ்ட் தகவல். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ளார்.