ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (11:34 IST)

சூர்யாவின் 'என்ஜிகே' படம் குறித்து முக்கியமான அப்டேட்

சூர்யா நடித்து வரும்  'என்ஜிகே' படம் குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.
 

 
நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங்  ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல்வாதியாக சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  இப்போது 'என்ஜிகே' படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம் ஆகியுள்ளது.  நேற்று முதல் சூர்யா டப்பிங் கொடுத்து வருகிறார். விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. எனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் என்ஜிகே திரைக்கு வரும். 
 
தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.