புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (13:16 IST)

இந்த ட்யூன் முழு மனசோட என் ரசிகர்களுக்காக..! – இளையராஜா பகிர்ந்த வீடியோ!

ரசிகர்களுக்காக பிரத்யேகமாக இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்த இசை வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளவர் இசையமைப்பாளர் இளையராஜா. எல்லா தலைமுறைகளிலும் இளையராஜா ரசிகர்கள் உள்ள நிலையில் மழை பெய்தாலே மழை, தேநீர், இளையராஜா என ஸ்டேட்டஸ் போடும் அளவிற்கு இளையராஜாவின் இசைக்கு பலர் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இல்லாத இளையராஜா இன்று தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். காலையில் தனக்கு தோன்றிய புதிய ட்யூனை இசைத்து காட்டிய இளையராஜா “இது முழுக்க முழுக்க என் முழு இதயத்திலிருந்து என் ரசிகர்களுக்காக மட்டும்..” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.