வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:09 IST)

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் இளையராஜா? முன்னணி கதாநாயகர்களிடம் பேச்சுவார்த்தை!

இளையராஜா பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்பாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

இளையராஜா சூப்பர் ஸ்டார் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த போதே பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வந்தார். அலைகள் ஓய்வதில்லை தொடங்கி என்னுயிர் தோழன் வரை பல படங்களை தயாரித்த அந்த நிறுவனம் ஒரு கட்டத்தில் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்துக்கு உயிர்க் கொடுக்கும் முயற்சியில் இளையராஜா இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகிய முன்னணி கதாநாயகர்களிடம் தேதிகள் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களில் யாராவது ஒத்துழைக்கும் பட்சத்தில் பாவலர் கிரியேஷன்ஸ் மீண்டும் புத்துணர்ச்சியோடு வரும் என்று சொல்லப்படுகிறது.
Source வலைப்பேச்சு