ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஜூன் 2024 (17:59 IST)

இளையராஜாவுக்கு பாடல்கள் மீது எந்த உரிமையும் கிடையாது! – எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் வாதம்!

ilaiyaraja
கூலி படத்தில் இடம்பெற்ற ‘டிஸ்கோ’ பாடல் மீது இளையராஜா காப்புரிமை வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அவருக்கு அந்த பாடல் மீது உரிமையில்லை என எக்கோ இசை நிறுவனம் கூறியுள்ளது.



சமீப காலமாக இளையராஜாவின் பாடல்களை படங்களில் பயன்படுத்துவது குறித்து அவர் மேற்கொள்ளும் காப்புரிமை வழக்குகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் ‘குணா’ படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ பாடலை பயன்படுத்தியதற்காக வழக்கு தொடர்ந்திருந்தார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசர் வீடியோவில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

ரஜினிகாந்த் நடித்து வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெறும் ‘வா வா பக்கம் வா’ படத்தில் வரும் சில பாகங்களை டீசரில் பயன்படுத்தியிருந்த நிலையில் அதுகுறித்து இளையராஜா வழக்கு தொடர்ந்தார். தன் அனுமதி பெறாமல் தனது பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கில் எக்கோ நிறுவனம் தற்போது அளித்துள்ள விளக்கத்தில், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளருடன் இளையராஜா எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. அதனால் அவரால் பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது. சம்பளம் கொடுத்து சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் உரிமையாளராகிறார். அதன்படி உரிமையாளரிடம் இருந்து முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தமிழில் சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா அந்த காலங்களில் பதிப்புரிமை குறித்த புரிதல் இல்லாததால் முறையாக ஒப்பந்தம் செய்யாமல் விட்டதால் தற்போது போராட வேண்டிய சூழல் உள்ளதாக அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

Edit by Prasanth.K