வியாழன், 31 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2024 (07:55 IST)

இந்த படம் தோல்வி அடைந்தா சினிமாவை விட்டு போயிடுறேன்! - நடிகர் விட்ட சேலஞ்ச்!

Kiran Appavaram

வளர்ந்து வரும் தெலுங்கு நடிகரான கிரண் அப்பாவரம், இன்று வெளியாகும் தன்னுடைய படம் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விலகுவதாக சவால் விட்டுள்ளார்.

 

 

சுதீப் மற்றும் சுஜித் என்ற இரு புதுமுக இயக்குனர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘கா’. இந்த படத்தில் கிரன் அப்பாவரம் கதாநாயகனாக நடித்துள்ளார். தன்வி ராம், சரிகா என்று இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் நேற்று இதன் ப்ரீ ரிலீஸ் ஷோ நடைபெற்றது.

 

இதில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய கிரண் அப்பாவரம் “எல்லாரையும் போல எனக்கும் வெற்றி படங்கள், தோல்வி படங்கள் உள்ளது. 4 வருடத்தில் நான் நடித்த 8 படங்களில் 4 வெற்றி படங்கள். எல்லா படமும் வெற்றி பெறும் என உறுதி அளிக்க முடியாது. ஆனால் ‘கா’ படம் மோசமான படம் என்று யாராவது உணர்ந்து, அது தோல்வி அடைந்தால் நான் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்” என உணர்ச்சிக் கொந்தளிப்பாய் பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K