வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (00:53 IST)

அதை நினைத்து கவலைப் படமாட்டேன் - முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை , சைக்கோ, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதி ராவ்.

இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் அவர் தனது சினிமா பயணம் குறித்த அனுபவத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில்,தியேட்டரில் இருந்து படம் பார்த்துச் செல்பவர்களின் மனதில் நடிகர்களின் கதாப்பாத்திரம் நெருடிக்கொண்டு இருக்க வேண்டும்.

இதற்கு எனக்கு ஹாலிவுட் நடிகர்களின் நடிப்புதான் எனக்கு முன்னுதாரணம். ஏனென்றால் அவர்கள் அவர்களின் வேலையைத்தேன் செய்து கொண்டிருப்பார்களே தவிர மற்றவர்களுடன் விவாதங்கள், விமர்சனங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.நானும் அப்படித்தான் என் மீதான விமர்சனங்களைக்கண்டு நான் கவலைப்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.