புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 மே 2021 (19:52 IST)

அழுகையோடு உன்னை வழியனுப்பி வைக்கிறேன்- சிம்பு உருக்கம் !

நடிகர் சிம்பு நற்பணி மன்றத்தில் அகில இந்திய செயலாளர் குட்லக் இன்று காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்புத் தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னுடம் இருந்து வரும் சகோதருமன குட்லக் சதீஷை இழந்திருக்கிறேன். கொரொனா என்றதும் ஆறுதல் சொல்லி மீண்டுவருவான் என மருத்துவமனைக்கு அனுப்பினேனே! அங்கு எடுத்துப்போகும் உடல்களைப் பார்த்து பயந்தது ஏன் சகோதரா?? பயந்து உன் இதயத்துடிப்பை நிறுத்திக்கொண்டது ஏன் சகோதரா?

உன் எதிர்ப்புச் சக்தி மீது நீ நம்பிக்கை கொள்ளாமல் போனது ஏன்?  நீ செய்த உதவிகளுக்கு நன்றி…அழுகையோடு உன்னை வழியனுப்பி வைக்கிறேன்… உனது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றித் தவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் வைரலாகி வருகிறது.