தூக்கம் இல்லாம சுத்தினு இருக்கேன்... விஜய் பட பாடலாசிரியர் டுவீட்
இன்று சர்வதேச தூக்கம் தினம் என்பதால் மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிக முக்கிய காரணம் என்பதை செய்திகள்,தொலைக்காட்சிகள், ரேடியோக்கள் வாயிலாக அறிந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், தூக்கம் குறித்த மீம்ஸ்களும்,செய்திகளும், மருத்துவர்களின் ஆலோசனைகளும் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
இந்நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதிவரும் பாடலாசிரியர் விவேக்கிடம் இன்று அவரது ரசிகர் ஒருவர், #HappyWorldSleepDay Anna என்று வாழ்த்துக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த விவேக், ப்ரோ .. தூக்கம் இல்லாம சுத்தினு இருக்கேன்..போவியா எனத் தெரிவித்துள்ளார்.
தனுஷின் ஜகமே மந்திரம் படத்தில் ரகிட ரகிட, வெறித்ஹன, மரணமாஸ் உள்ளிட்ட பாடல்களை அவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.