’’உங்கள் அன்பை நிரூபிக்க... இப்படிப் பண்ண வேண்டாம்’’ - நடிகர் சோனுசூட்
தயவு செய்து தனது பெயரை பச்சை( டாட்டு) குத்தி கொள்ள வேண்டாமென நடிகர் சோனு சூட் தனது ரசிகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா கால ஊரடங்கு இந்தியா முழுவதும் அமலில் உள்ள நிலையில் பிரபல நடிகர் சோனு சூட், எந்தவித பிரதிபலனையும் பார்க்காமல் பல மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் , வெளிநாடுகளில் தவித்த இந்திய மாணவர்களுக்கு வினாம உதவும், புலம்பெயர் தொழிலாளார்களுக்கு பேருந்து, ரயில் வசதி செய்தும், விவசாயிகளுக்கு டிராக்டர் வசதியும்,மாணவர்களின் படிப்புக்கு உதவியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என தன் சொத்துகளை அடமானம் வைத்து உதவி வருகிறார்.
அவரை இந்திய மக்கள் கடவுள் போல் கோயில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரு ரசிகர்கள் தனது கையில் நடிகர் சோனு சூட் பெயரைப் டாட்டூ குத்திக் கொண்டு அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, சோனு சூட்டிற்கு டேக் செய்திருந்தார்.
இதைப் பார்த்தை நடிகர் சோனு சூட் அதிர்ச்சி அடைந்து, இதுபோல் செய்ய வேண்டாமெனத் தனது ரசிகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
சகோதரா…நீங்கள் என் மீது கொண்டுள்ள அன்பு எனக்குத் தெரியும். எனவே அதை என்னிடம் காண்பிப்பதற்கான எனது பெயரை நீங்கள் இத்தனை வகியைத் தாங்கிப் டாட்டூ குத்திக் கொள்ள வேண்டுமா??? எனக் கூறியுள்ளார்.
சோனு சுட்டின் அக்கறையும் மனிதநேயமும் பலரையும் நெகிழ்சி அடையச் செய்துள்ளது.