’’போருக்கு செல்வது போல உணர்கிறேன்’’…அவர்களுக்கு தலைவணங்குகிறேன்…. பிரபல நடிகை
Sinoj|
Last Modified வெள்ளி, 2 அக்டோபர் 2020 (20:22 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் மீனா. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மோகன் லாலுடன் மீனா இணைந்து நடித்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமானத்தில் செல்லும்போது,மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையின்போதும் அணியும் பிபிஇ உடையை அணிந்துள்ளார் மீனா.
இதுகுறித்து அவர் கூறும்போது, இந்த உடையை அணிந்ததும் விண்வெளிப் பயணத்திற்குச் செல்வது போலிருந்தாலும் நான் போருக்குச் செல்வது போல உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த உடையை அணிவதால் வியர்வை வழிகிறது.
முகத்தை துடைக்க முடியவில்லை. ஆனால் இதே உடையுடன் இரவு பகலாக இருந்த சுகாதாரப் பணியாளர்க்குத் தலை வணங்குவதாகவும் அவர்கள் மீது மதிப்புக் கூடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.