1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (21:15 IST)

''எனக்கு கேப்பே இல்லை''... மாமன்னன் பட ஆடியோ விழாவில் வடிவேலு பேச்சு

mamannan
மாரி செல்வராஜ் இயக்கத்தில்,  உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தற்போது நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது: ரொம்ப நாள் கழித்து வரவில்லை. எந்த நேரமும் மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு செல்போனில் மீம்ஸ் கிரியேட்டர்ஸால் கேப்பே இல்லாமல் வந்து கொண்டிருந்தேன்.

‘’அண்ணன் உதயநிதி ஹீரோவாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், பகத்பாசில், உங்கள் வீட்டுப் புள்ளை நான் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறோம்.  ஒரு நல்ல கதைகளத்தை மாரி செல்வராஜ் அமைத்துள்ளார். இப்படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது. ஏர்.ஆர்.ரஹ்மான் தான் என்னை பாடவைத்தார். மறைத்த அம்மா எனக்குப் பாடவும், மீண்டு வெற்றிகரமாக நடிக்கவும் உதவி செய்திருக்கிறார். அம்மா இன்னும் இறக்கவில்லை என்னுடன் வாழ்கிறார் என்பதை கூறுகிறேன். தேவர் மகனுக்குப் பின் இது ஒரு பெரிய படம் எனக்கு. நல்ல குணச்சித்திரமாகவும், வில்லன் போன்றும் இருக்கும்‘’ என்று தெரிவித்துள்ளார்.

 மேலும், இப்படத்தின் ஆடியோ நூக் பாக்ஸை   நடிகர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கதிதில் வெளியிட்டுள்ளார்.