செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: சனி, 26 அக்டோபர் 2019 (17:40 IST)

நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை" - சூப்பர் ஸ்டார் உருக்கம்

பாலிவுட்டின் பாட்சா, கிங்கான், என அழைக்கப்படுவர் ஷாருக்கான். ரொமாண்டிக், ஆக்சன் என எந்தக் காட்சியிலும் தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களைப் பெற்று  சூப்பர்ஸ்டாராக உள்ளார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு பியூஜி என்ற தொலைக்காட்சி நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தீவானா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
 
அன்று தொடங்கிய அவரது சினிமா பயணம் இன்று வரை வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
இந்நிலையில் தனது நடிப்பு குறித்து ஷாருக்கான் கூறியதாவது :
 
ஆரம்பகாலத்தில் , நானா படேகர், அம்ரிதா சிங், ஜூஹி சாவ்லா ஆகிய நடிகர்களுக்கு முன்னாள் நடிப்பதற்கு நான் பதற்றம் கொண்டேன். ஒரு கட்டத்தில் என்னால் நடிக்க முடியாது என நினைத்தேன். ஆனால் இயக்குநர் என்னை சமாதானம் செய்தார்.
ஆனால், மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு விட்டனர். இந்த நடிப்பு பயணத்தில் நான் எனது பாணியை விரும்புகிறேன் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.