ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 மே 2024 (20:04 IST)

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Karthik kumar
சுசித்ரா வீடியோ விவகாரத்தில் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பேசியதாக ஆடியோ ஒன்று பரவி வரும் நிலையில் அது தான் பேசியதில்லை என்று அவர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.



சமீபத்தில் யூட்யூப் பேட்டி ஒன்றில் பின்னணி பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்தும், தனுஷ் குறித்து பேசிய காணொளி பரவி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

தனது முன்னாள் மனைவி சுசித்ரா தன்னை ஓரினசேர்க்கையாளர் என பேசியது குறித்து சமீபத்தில் வீடியோ வெளியிட்ட கார்த்திக் குமார், தான் அதை சிறுமையாக நினைக்கவில்லை என்றும், PRIDE ஆக இருப்பதும், அவர்களுக்கு ஆதரவாக நிற்பதும் பெருமைக்குரியது என்றும் பேசியிருந்தார்.


இந்நிலையில் தற்போது கார்த்திக் குமார் சுசித்ராவிடம் பேசியதாக ஒரு தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் சுசித்ரா ஒரு பிராமண பெண்ணை போல செயல்படாமல், ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்லி அந்த சாதியினரை போல அருவறுக்கத்தக்க வகையில் பேசுவதாகவும் அவர் பேசியிருந்ததாக அந்த வீடியோ பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார்த்திக் குமார் இவ்வாறு குறிப்பிட்ட சாதி பெண்களை கீழ்மைப்படுத்தி பேசுவது தவறு என பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அதில் உள்ளது தனது வாய்ஸே இல்லை என்றும், தான் யாரையும், எந்த சாதி பெண்களையும் கீழ்மைப்படுத்தி பேசும் தன்மை கொண்டவனில்லை என்றும் விளக்கம் அளித்து கார்த்திக் குமார் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K