செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:50 IST)

நடிகர் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்- இயக்குனர் பாண்டியராஜ் பேச்சு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு  தொடங்கியது. 
 
இதில் நடிகையாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், காமெடி வேடத்தில் நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். 
 
இந்த நிலையில் திருச்செந்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாண்டியராஜன் பேசுகையில்.....
 
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நான் இயக்குகிறேன். இதில் நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கான முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும். இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இது இருக்கும். எனது படத்தில் அனைத்து படத்திற்கும் கருத்துக்கள் இருக்கும் அதை போல் இந்த படத்திலும் குடும்பத்திற்கு பிடிக்குமாறு உள்ள கருத்துக்கள் உள்ளது. 
விஜய் சேதுபதியும் நானும் சேர்ந்து உருவாக்கு முதல் படம் இது. நிச்சயம் இது பெரிய அளவில் வெற்றி பெறும். 
இந்த கதைக்கு பொருத்தமானவர் விஜய் சேதுபதி தான்.
நான் எடுத்த படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் பசங்க படத்தை தான் எடுப்பேன். 
 
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. 
தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனனுக்கு வாழ்த்துக்கள். எனது படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு அந்த விருது அவருக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த படத்தில் கேரக்டர்களாகவே நிறைய சர்ப்ரைஸ் உள்ளது. 
அது குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்.
சினிமா தற்போது லப்பர் பந்து, வாழை, நந்தன் போன்ற படங்களாக இருந்தாலும் சரி , மற்றொருபுறம் கோட், வேட்டையன் என ஆரோக்கியமான படங்கள்தான் வந்து கொண்டிருக்கிறது.
விஜய் அடுத்த கட்டமாக அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் அவர் நிச்சயம் அரசியலில் ஜெயிப்பார். 
 
நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள். அதனால் தான் இன்று இங்கு இந்த படத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.