புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 16 ஜனவரி 2021 (18:26 IST)

நெகட்டிவ் விமர்சனங்களையும் ஏற்று கொள்கிறேன்: ‘மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ்

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. இந்தப்படம் ஜனவரி 13, 14, 15 ஆகிய மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 102 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் பாதிக்குமேல் அதாவது ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சனங்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துள்ளது. இந்த நெகடிவ் விமர்சனங்கள் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியபோது நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன் அடுத்த படத்தில் அதை நான் தவிர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படம் அனைத்து தரப்பினர்களுக்கும் பிடித்துள்ளதால் தான் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்க்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்