ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (11:02 IST)

புரட்சி எப்படி உருவாகிறது...? பா.ரஞ்சித் விளக்கம்

புரட்சி எப்படி உருவாகிறது...? பா.ரஞ்சித் விளக்கம்

சுசீந்திரனின் மாவீரன் கிட்டு படத்தின் டீஸரை ரஞ்சித் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், புரட்சி எப்படி உருவாகிறது என்பதை விளக்கினார். கபாலி படத்தில் புரட்சியை உருவாக்கிய பிறகு, ரஞ்சித் புரட்சி குறித்து ஏதேனும் பேச வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.


 
ரஞ்சித்தும் புரட்சி குறித்து விதவிதமான கருத்துகளை கூறி ரசிகர்களை புரட்சியின் பக்கம் இழுத்து வருகிறார். இந்திய திரையுலகில்... ஏன்.. உலக அளவில் இப்படியொரு புரட்சியை எந்த சினிமா இயக்குனரும் செய்ததில்லை. 
 
மாவீரன் கிட்டு டீஸரை பார்க்கையில் சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்தை சுசீந்திரன் இயக்கியிருப்பதை உணர முடிகிறது என்றவர், இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும் போது தான் அது புரட்சியாக மாறுகிறது என்றார்.
 
சுசீந்திரன் படத்தின் நாயகனிடமும் அந்த புரட்சி தெரிவதாக அவர் கூறினார்.
 
புரட்சி வெல்லட்டும்.... ரஞ்சித்தின் புரட்சி வெல்லட்டும்...