1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 23 நவம்பர் 2022 (23:29 IST)

வாரிசு, துணிவுக்கு எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கப்படும்? பிரபல தயாரிப்பாளர் பதில்

thunivu second
பொங்கல் பண்டிகையொட்டி ரிலீஸ் ஆகவுள்ள  வாரிசு, துணிவு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது குறித்து,  பிரபல தயாரிப்பாளர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களின் இருவரின் படங்களும் 8 ஆண்டுகளுக்குப்பின்  பொங்கல் பண்டிக்குக்கு நேரடியாக மோதவுள்ளது.

இதனால், இரண்டு பேரின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், துணிவு படத்தை ரெய் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் நிலையில், இதற்கு 800 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வாரிசு படத்திற்கு லலித் சார்பில் இன்னும் தியேட்டர்கள் கைப்பற்றவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில்,இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, விஜய்யின் வாரிசு படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீஸாகும் எனவும், தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறோம். விஜய் படத்திற்காக மட்டும் இந்த தடையில்லை. இது பற்றி சுமூகமாகப் பேசி தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

vaarisu

தயாரிப்பாளர் கே.ராஜன், விஜய் பெரிய நடிகர், அஜித் பெரிய நடிகர். எனவே, வாரிசு-50%, துணிவு-50% படமும் சம அளவில் தியேட்டர்கள் கிடைக்கும்! தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் போட்ட முதலை எடுக்க நினைக்கிறார்கள். விஜய்யின் படம் இங்கேயும் ரிலீஸ்…தெலுங்கிலும் ரிலீஸ் என்பதால், அவர்கள் இதுபற்றி பேசிவருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj