எப்படி தாங்குவாய் மகளே… லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறிய ’’பிக்பாஸ் தந்தை ‘’சேரன்...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் -3ல் கலந்துகொண்ட போட்டியாளர்கலில் லாஸ்லியாவும் ஒருவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரிநேசன் என்பவர் நேற்று காலமானார். இது லாஸ்லியாவின் குடும்பத்தாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
எனவே திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் முக்கியமானவர் இயக்குநர் சேரன். இவர் லாஸ்லியாவின் பிக்பாஸ் தந்தை என்றே அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று இவர் லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், லாஸ்லியா தந்தை மீது எத்தனை அன்பும் கனவும் வைத்திருந்தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் செய்தி என்னையே உலுக்கியது. எப்படி தாங்குவாய் மகளே… சொல்ல முடியாத தூயரில் துடிக்கும் உனக்கும் உனது குடும்பத்துக்கும் என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.